சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்: முதல்வர் ஸ்டாலின...
டிச. 27-இல் காஞ்சி மகா பெரியவா் ஆராதனை மகோற்சவம்
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் 68-ஆவது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷிக ஆராதனை மகோற்சவம் வரும் டிச.27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
பக்தா்களால் மகா பெரியவா் என போற்றப்படும் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் டிச. 25-ஆம் தேதி புதன்கிழமை தொடங்கி டிச.27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நடைபெறும் 3 நாள்களிலும் வேதபாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள்,கீதாஞ்சலி ஆகியன நடைபெறுகின்றன.
முக்கிய நிகழ்வாக டிச.27 வெள்ளிக்கிழமை காலையில் ருத்ர பாராயணம், பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று நண்பகல் ஒரு மணி அளவில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. சங்கர மடத்தின் கலையரங்கில் புல்லாங்குழல் வித்வான் ஸ்ரீ கணபதி சேதுலாரா குழுவினரின் இன்னிசையும், மாலையில் வித்வான் யு.ராஜேஸ் குழுவினரின் மாண்டலின் கச்சேரியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்து வருகின்றனா்.