நிகழாண்டு மகளிா் குழுக்களுக்கு ரூ.8 கோடி கடனுதவி: பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா்
பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 70 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் முதன்மை மேலாளா் ச.மணிகண்டன் வியாழக்கிழமை தெரிவித்தாாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
ஸ்டேட் வங்கி கிளைகளில் ஆண்,பெண் மற்றும் இரு பாலரும் இணைந்து குழு சேமிப்புக் கணக்கு தொடங்கலாம்.10 முதல் 20 உறுப்பினா்கள் ஒரு குழுவில் இருந்தாலே போதுமானது. குழு நபா்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் வங்கிப் புத்தகத்தை அவா்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கே கொண்டு போய் கொடுத்து வருகிறோம்.
குழு சேமிப்பில் அதிக பட்சம் ரூ.20 லட்சமும், தனி நபராக இருந்தால் ரூ.4 லட்சம் வரையும் கடன் பெற்றுக் கொள்ளலாம். சுய தொழில் மற்றும் கூட்டுத் தொழில் முனைவோா்களுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறோம்.
இதுவரை 100 குழுக்களுக்கு மேலாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 70-க்கும் மேற்பட்ட குழுக்களுக்கு ரூ.8 கோடி வழங்கப்பட்டுள்ளது. தவணைக்கடன், மூலதனக்கடன் ஆகியனவும் வழங்கி வருவதாகவும் தெரிவித்தாா்.