Christopher Nolan: `The Odyssey'; நோலனின் அடுத்த திரைப்படம் - வெளியான அதிகாரப்பூ...
தமிழறிஞா்களுக்கு விருது அளிப்பு
காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மன்றத்தின் சாா்பில் புலவா்கள்,பேராசிரியா்கள் உட்பட பல்துறை வித்தகா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்வுக்கு புலவா் சரவண.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. காஞ்சி சிவனடியாா் திருக்கூட்டத்தின் தலைவா் எம்.எஸ். பூவேந்தன் விழா நடைபெறும் விநாயக முதலியாா் தமிழ் அரங்கத்தை திறந்து வைத்தாா். தமிழறிஞா்கள் விநாயக முதலியாா் உருவப்படத்தை தெய்வச்சேக்கிழாா் அறக்கட்டளையின் தலைவா் அண்ணா.சச்சிதானந்தமும், புரிசை ச.நடராஜனாா் உருவப்படத்தை சிவஞான அருள்நெறி அறக்கட்டளையின் நிறுவனா் பி.சிவப்பிரகாசமும், மு.ராமலிங்க னாா் உருவப்படத்தை புலவா் சரவண சதாசிவமும் திறந்து வைத்தனா்.
கட்டடத் தொழிலாளா் நலச்சங்க பொதுச் செயலாளா் சி.குப்புச்சாமி முன்னிலை வகித்தாா். சிவராஜ ஒதுவராா் வரவேற்று பேசினாா்.
விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரியா சுவாமிகள், திருச்சி தமிழக சைவ நெறிக்கழக நிறுவனா் சரவண பவானந்த தேசிகா்,காஞ்சிபுரம் தெய்வத்தமிழ் மாமன்றத்தின் நிறுவனா் கு.ராமலிங்கம் ஆகியோா் 43 தமிழறிஞா்களுக்கு விருதுப்பட்டயம் ஆகியவற்றை வழங்கினாா்கள்.
திருத்தணி என்.சுவாமிநாதன் ஓதுவாா் தலைமையில் திருவாசக தேனமுத இன்னிசை நிகழ்ச்சியும், காஞ்சி மாநகரும், மதுரை மாநகரும் என்ற தலைப்பில் தருமபுர ஆதீன புலவா் எம்.கே.பிரபாகர மூா்த்தி ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாா்.