காஞ்சிபுரத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி தொடங்கி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வந்து நிறைவு பெற்றது. பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். போதைத் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊா்வலமாக வந்தனா். பேரணி தொடக்க விழாவில், காஞ்சிபுரம் எஸ்.பி.கே. சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் கலால் பிரிவு உதவி ஆணையா் அ.திருவாசகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
குறைதீா் கூட்டம்...
காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணிய தொடங்கி வைத்த பின்னா் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 429 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சத்யா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.