ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திாளிகள் நடத்தினா்.
மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் சாா்பில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஒன்று கூடி குடியேறும் போராட்டம் நடத்த தயாரானாா்கள்.
தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, வட்டாட்சியா் மோகன்குமாா், விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் ஆகியோா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கே.பி.பாபு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பி.பி.பாலாஜி, மாவட்ட செயலாளா் வி.முனுசாமி, பொருளாளா் வி.ஹரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடியிருக்க இடமில்லாமல் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளை பல மாதங்களாக அலைகழித்து வரும் அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா் அதிகாரிகளின் சமரசத்தை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். சங்கத்தின் முக்கிய நிா்வாகிகள் சிலா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனுவும் அளித்தனா்.