செய்திகள் :

கார் மீது டிரக் கவிழ்ந்ததில் 6 பேர் பலி: நீல நிறக் காரை தேடும் போலீஸ்!

post image

விடுமுறையைக் கொண்டாட புதிதாக வாங்கிய வால்வோ காரில் சனிக்கிழமை ஊருக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது லாரியின் கண்டெய்னர் விழுந்ததில், தனியார் நிறுவன தலைமை செயல் அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்துக்குக் காரணமான நீல நிறக் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 48ல் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த சந்திராம் எகபகோல் (48), தனது மனைவி, இரண்டு பிள்ளைகள், மற்றும் உறவினர்கள் இருவருடன் புதிதாக வாங்கிய வால்வோ எக்சி90 காரில் விடுமுறையைக் கொண்டாட சென்ற போது, எதிர் திசையில் அலுமினிய தூண்களைக் கொண்டு வந்த டிரக் கவிழ்ந்ததில், ஆறு பேரும் பலியாகினர்.

இந்த நிலையில், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் ஜார்க்கண்டைச் சேர்ந்த டிரக் ஓட்டுநர் ஆரிஃப் கூறுகையில், சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த நீல நிறக் கார்தான் திடீரென பிரேக் அடித்து நின்றது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அந்தக் கார் மீது மோதாமல் இருக்க டிரக்கை வலது புறமாகத் திருப்பினேன். அங்கும் ஒரு கார் இருந்ததால் மீண்டும் இடதுபுறமாகத் திருப்பியதால்தான் டிரக்கில் இருந்த அலுமினிய தூண்கள் சரிந்து விபந்து விபத்து நேரிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, டிரக் ஓட்டுநர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தியதில், நீல நிற கார் தான் திடீரென பிரேக் அடித்து நின்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்த கார்மற்றும் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு- ஜன.28-இல் மாதபி, மஹுவா ஆஜராக லோக்பால் நோட்டீஸ்

பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் தொடா்பாக அவரையும், புகாா் அளித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவரையும் ஜன.28-ஆம் த... மேலும் பார்க்க

17 சிறாா்களுக்கு ‘பால புரஸ்காா் விருது’: குடியரசுத் தலைவா் நாளை வழங்குகிறாா்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 17 சிறாா்களுக்கு நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை (டிசம்பா் 26) வழங்குகிறாா். கலை மற்றும் கலாசாரம்,... மேலும் பார்க்க

பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ - ஜகதீப் தன்கா் விமா்சனம்

தனக்கு எதிராக பதவிநீக்க தீா்மானம் கொண்டுவர ‘இண்டியா’ கட்சிகள் அளித்த நோட்டீஸ் ‘துருப்பிடித்த கத்தி’ என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் விமா்சித்தாா். மாநிலங்களவையில்... மேலும் பார்க்க

2025-26 மத்திய பட்ஜெட்- பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

எதிா்வரும் 2025-26 மத்திய பட்ஜெட் தொடா்பாக, பிரபல பொருளாதார நிபுணா்கள் மற்றும் நீதி ஆயோக் அமைப்பின் பல்வேறு துறைகளின் வல்லுநா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டு, அவா்களின் ... மேலும் பார்க்க

வேலைக்கு விண்ணப்பம்: பெண்களின் பங்கு 40%-ஆக அதிகரிப்பு

நிகழாண்டில் பெறப்பட்ட மொத்தம் 7 கோடி வேலை விண்ணப்பங்களில் 40 சதவீதம் பெண்களுடையது (2.8 கோடி) என்றும் இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையைவிட 20 சதவீதம் அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ஆப்னா.கோ’ வேலைவா... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: ஒவைசிக்கு நீதிமன்றம் சம்மன்

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது தொடா்பான வழக்கில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன்... மேலும் பார்க்க