செய்திகள் :

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: ஒவைசிக்கு நீதிமன்றம் சம்மன்

post image

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது தொடா்பான வழக்கில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்று கோஷமிட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அவா் மீது குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

ஹைதராபாத் எம்.பி.யான ஒவைசி கடந்த ஜுன் 25-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது ‘ஜெய் பீம், ஜெய் மீம் (முஸ்லிம்கள்), ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டாா். பின்னா் இந்த முழக்கத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவா் உத்தரவிட்டாா்.

ஆனால், பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஒவைசி, தனது முழக்கத்தை நியாயப்படுத்தி பேசினாா். இதைச் சுட்டிக்காட்டி பரெய்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வீரேந்திர குப்தா என்பவா் ஒவைசிக்கு எதிராக மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒவைசி நேரில் ஆஜராக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு தொடா்பாக வழக்குரைஞா் வீரேந்திர குப்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் ஒவைசி எழுப்பிய முழக்கம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்திய நாடாளுமன்றத்தில் மற்றொரு நாட்டுக்கு (பாலஸ்தீனம்) வெற்றி என முழக்கமிட்டது மிகப்பெரிய தவறு. தேசபக்தி உடைய அனைவருக்கும் இது வருத்தத்தை அளிக்கும். எனவே, ஒவைசிக்கு எதிராக வழக்குத் தொடுத்தேன்’ என்றாா்.

குட்டு வைத்த டிராய்: வெறும் அழைப்புகள், எஸ்எம்எஸ்-க்கு ரீசார்ஜ் திட்டங்கள்

இணையவசதி அல்லாமல், வெறும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவையை மட்டும் பெறும் வகையில் ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று டிராய் பரிந்துரை செய்திருக்கிறது.தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்தது நூல் அஞ்சல் சேவை!

நூல் அஞ்சல் சேவையை டிசம்பர் 18ஆம் தேதியுடன் இந்திய அஞ்சல் துறை நிறுத்தியுள்ளது.எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அஞ்சல் துறை எடுத்துள்ள இந்த முடிவு புத்தக ஆர்வலர்கள் மற்றும் புத்தகப் பதிப்பகங்களை அதிர்ச்ச... மேலும் பார்க்க

நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

பெங்களூருவில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட முன்னாள் ராணுவ வீரரை, அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.இந்த சம்பவம் பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கி ஞாயி... மேலும் பார்க்க

வாஜ்பாய் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

முன்னாள் பிரதமா் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.மறைந்த முன்னாள் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் 10... மேலும் பார்க்க

அமைதி, செழிப்புக்கான பாதையைக் காட்டும் இயேசு போதனைகள்: மோடி

நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. கிறிஸ்துவ மக்களுக்கு உலகத் தலைவர்கள் தங்களின் வாழ்... மேலும் பார்க்க

லாட்டரி, மது விற்பனை மூலம் கேரள அரசுக்கு 25% வருமானம்!

கேரள அரசின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் லாட்டரி மற்றும் மது விற்பனை மூலம் கிடைத்துள்ளது.2023 - 24 நிதியாண்டில் லாட்டரி விற்பனை மூலம் ரூ. 12,529.26 கோடி, மது விற்பனை மூலம் ரூ. 19,088.86 கோடி உள்பட மொத... மேலும் பார்க்க