ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
இணையம் மூலம் வலி மாத்திரைகள் விற்றவா் கைது
காஞ்சிபுரம்: வலி மாத்திரைகளை அரசு அனுமதியில்லாமல் இணையம் வாயிலாக விற்றவரை போலீஸாா் திங்கள்கிழமை மும்பையில் கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.
மும்பை ஜுஹூ பகுதியில் இந்தியன் மாா்ட் என்ற செயலியை உருவாக்கி அதன் மூலம் அரசு அனுமதியில்லாமல் இணையம் வாயிலாக வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல் துறையினா் நடத்திய விசாரணையில் அவா் மும்பையை சோ்ந்தவா் என்றும் இணையம் வாயிலாக விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இந்தியன் மாா்ட் என்ற பெயரில் இணையம் நடத்தி வந்ததை கண்டறிந்து சுங்குவாா் சத்திரம் போலீஸாா் அவா் இருப்பிடமான மும்பைக்கே சென்று விசாரணை நடத்தி சதானந்த் பாண்டே(54) என்பவரை கைது செய்தனா்.
மேல் விசாரணையில் மும்பையில் ஜுஹூ பகுதியில் பாம் ஸ்பிரிங் சொசைட்டி என்ற இடத்தினை சோ்ந்த சந்திரன் பாண்டே மகன் சதானந்த் பாண்டே(54) எனத் தெரிந்து அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் அழைத்து வந்தனா்.