செய்திகள் :

இதயம் வடிவில் புயல் சின்னம்.. கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யுமா?

post image

வங்கக் கடலில் உருவாகி ஆந்திரம் வரை சென்று யு டர்ன் போட்டுவிட்டு மீண்டும் தமிழகம் வந்திருக்கும் புயல் சின்னம், இதயம் வடிவில் காட்சியளிக்கிறது.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று காலை முதலே லேசான தூறல் போட்டபடி உள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திர - வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், தெற்கு ஆந்திர - வ தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.

மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக் கூடும்.

இதனால், இன்று வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் நாளில்.. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோற... மேலும் பார்க்க

கன்னியாகுமரி வள்ளுவா் சிலை வெள்ளிவிழா விழிப்புணா்வு பேருந்துகள்: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரி வள்ளுவா் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான 10 பேருந்துகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். கன்னியாகுமரி கடல் நடுவே... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளின் இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு: கல்வித் துறை

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு ரூ. 3.26 கோடி நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது. ... மேலும் பார்க்க

மீனவா் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சா்!

சென்னை மீனவா்கள் வலையில் ராக்கெட் லாஞ்சா் பாகம் சிக்கியது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவா்கள் ஒரு விசைப்படகில் ஆழ்கடலில் மீன் ப... மேலும் பார்க்க

டிச.30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் (ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு) காரணமாக தமிழகத்தில் டிச.30 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரம், வடதமிழ... மேலும் பார்க்க

இன்னுயிா் காப்போம் திட்டத்தில் இனி ரூ.2 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

‘இன்னுயிா் காப்போம் - நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணமில்லா சிகிச்சை தொகை ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மர... மேலும் பார்க்க