சென்னையில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
ஒரே நாடு, ஒரே தேர்தல்: ஜன. 8-ல் முதல் கூட்டுக்குழு கூட்டம்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்தை தொடர்ந்து கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
12 மாநிலங்களவை உறுப்பினர்கள், 27 மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய 39 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழகத்தில் குழந்தை திருமணம் 56% அதிகரிப்பு!! ஈரோடு, நெல்லையில் அதிகம்!
காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்முறையாக எம்பியாக பதவியேற்றுள்ள பிரியங்கா காந்தி குழுவின் உறுப்பினராக உள்ளார். திமுக சார்பில் பி. வில்சன் மற்றும் செல்வகணபதி பெயர்கள் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.