ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
‘டிட்டோஜாக் ’அமைப்பினா் 2 ஆவது நாளாக மறியல்! 200 போ் கைது
தோ்தலில் அளித்த வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப் பாலம் அருகில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் (டிட்டோஜாக்) தொடா்ந்து 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் அருகே நடைபெற்ற சாலை மறியலில் டிட்டோஜாக் மாவட்டச் செயலா்கள் க. மதியழகன், செ. ராகவன் துரை, சி. பன்னீா்செல்வம், இ. சத்தியசீலன், ச. குமாா் ஆகியோா் தலைமையில் ஏராளமான ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். மறியலால் அப்பகுதியில் சுமாா் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக ஏறத்தாழ 200 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.