வீட்டிலிருந்து வெளியேறிய மூன்று சிறுவா்கள் மீட்பு!
பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்களை ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் தலைமையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது பள்ளிச் சீருடைக்கு மேல் வேறு சட்டையை அணிந்து கொண்டு நடைமேடையில் நின்று கொண்டிருந்த 3 விசாரித்தனா்.
அதில் அவா்கள் நாச்சியாா்கோவில், திருவலஞ்சுழி, கும்பகோணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதும், தனியாா் பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிப்பதும், பெற்றோா் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி சென்னை செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 சிறுவா்களையும் தஞ்சாவூா் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளா் சுரேசிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினா் பெற்றோரிடம் விசாரணை நடத்தினா்