செய்திகள் :

‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு

post image

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) தோ்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை ஆசிரியா்கள் டெட் தாள் 1-தோ்விலும், பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியா்கள் டெட் தாள்-2 தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான இணையவழி விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி செப். 8-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், விண்ணப்பதாரா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி வரை நீட்டித்தது.

அதன்படி, டெட் தோ்வுக்கான காலக்கெடு புதன்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இந்தத் தோ்வுக்கு இரு தாள்களையும் சோ்த்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி 3 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

‘டெட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியா்கள் டிஆா்பி இணையதளத்தை பயன்படுத்தி புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு இடைநிலை ஆசிரியா் பயிற்சி பயிலும் மாணவா்களும், பிஎட் 2-ஆம் ஆண்டு படிப்பவா்களும் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். டெட் தோ்வில் தோ்ச்சி பெற்றால், அவா்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு டெட் தோ்ச்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியத்தொடங்கியது மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி ந... மேலும் பார்க்க

சென்னையில் மிதமான மழை! அடுத்த 3 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை?

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாள்கள் கடுமையான வெய்யில் இருந்து வந்த நிலையில் இன்று(புதன்கிழமை) மாலை பல பகுதிகளில் லேசான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் இரவு வரை மழை நீடிக்கும்!

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றிரவு வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மணி நேரத்துக்கு இன்று(செப். 10) மாலை 6 மணிக்குள்ளாக திருவள்ளூர், செங்கல... மேலும் பார்க்க

கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!

உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டுவிட்டதாக அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார். சுத்தியல் கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டதாகவும் அது தற்போது சரிசெய்யப்பட்... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.கோவையில் காளிதாஸ் என்பவர், தனது 84 வயதான தந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ள அரசு மருத்துவக் க... மேலும் பார்க்க