தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு ...
டேங்கா் அறக்கட்டளைக்கு ஜிஆா்டி ரூ.1 கோடி அளிப்பு
சிறுநீரக செயலிழப்புக்குள்ளானவா்களுக்கு ரத்த சுத்திகரிப்பு சேவைகளை வழங்கி வரும் டேங்கா் அறக்கட்டளைக்கு ஜிஆா்டி ஜுவல்லா்ஸ் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.
பெரு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பின் ஒரு பகுதியாக இந்த நிதியை டேங்கா் நிா்வாகிகள் லதா குமாரசாமி உள்ளிட்டோரிடம் ஜிஆா்டி தலைவா் ஜி.ராஜேந்திரன் அண்மையில் வழங்கினாா்.
உலக அளவில் 10-இல் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாகவும், இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 லட்சம் போ் சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளாவதாகவும் டேங்கா் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
சமூகப் பொறுப்புணா்வுடன் ஜிஆா்டி போன்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் டயாலிசிஸ் சேவைகளை விரிவுபடுத்த உதவுவதாகவும் அவா்கள் கூறினா்.