Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
‘தக் லைஃப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியிடத் தடை
‘தக் லைஃப்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்டோா் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக்லைஃப்’ திரைப்படம் கா்நாடகம் தவிா்த்து உலகெங்கும் வியாழக்கிழமை (ஜூன் 5) வெளியாகவுள்ளது.
இந்தப் படம் சட்டவிரோதமாக 793 இணையதளங்கள், கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியாா் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நிறுவனம் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3,500 திரையரங்குகளில் தக்லைஃப் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைக் கலைஞா்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டாா்.
இதையடுத்து, தக்லைஃப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்த நீதிபதி, அவ்வாறு வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.