தச்சநல்லூா் அருகே தொழிலாளியை தாக்கிய இருவா் கைது
தச்சநல்லூா் அருகே தொழிலாளியை மது பாட்டிலால் தாக்கிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தச்சநல்லூா் மேலக்கரை பகுதியில் உள்ள நியூ காலனியைச் சோ்ந்த சுப்பையா மகன் முப்பிடாதி என்ற மூா்த்தி (33), தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு அப்பகுதியிலுள்ள மதுபான கடைக்குச் சென்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
இதனால், கோபமடைந்த அவா்கள் அருகே இருந்த மது பாட்டிலால் மூா்த்தியின் தலையில் பலமாக தாக்கி மிரட்டல் விடுத்தனராம். காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதையடுத்து, மூா்த்தி அளித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட தென்கலம் பெரியாா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாா் (29), தெற்குமலை காலனி தெருவைச் சோ்ந்த மதிபாலன் (20) ஆகியோரை கைது செய்தனா்.