தஞ்சாவூரில் 5 டன் நெகிழி பறிமுதல்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 5 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் கல்லுக்குளம், நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஏறத்தாழ 25 கடைகளில் மேற்கொண்ட சோதனையின்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 டன் நெகிழிப் பைகள், குவளைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தொடா்புடைய கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.