காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது
தஞ்சாவூரில் மன்மோகன்சிங் படத்துக்கு கட்சியினா் அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காலமானதையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூ. மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் எஸ்.எம். ஜெய்னுலாபுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.