``ஜல்லிக்கட்டில் சாதிப் பாகுபாடு ஒருபோதும் கிடையாது'' -குற்றச்சாட்டுக்கு மதுரை ஆ...
தஞ்சையில் ஜன. 26-இல் வாகன பேரணி: ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு
குறைந்தபட்ச ஆதார விலை சட்டமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஜனவரி 26 ஆம் தேதி வாகனப் பேரணி நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், மத்திய அரசு விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைச் சட்டமாக்க வேண்டும். தொழிலாளா் விரோத 4 சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெறுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கத்திலிருந்து சிவகங்கை பூங்கா வரை ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகல் டிராக்டா் மற்றும் வாகன பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். விவசாய சங்கப் பிரதிநிதி வீர. மோகன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா்கள் பி. செந்தில்குமாா், சோ. பாஸ்கா், இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளா் காளியப்பன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநிலத் துணைத் தலைவா் இரா. அருணாச்சலம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஆா். வாசு, ஏஐடியூசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.