திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
பல்லடத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பல்லடத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் உணவகங்கள், மளிகை கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை மற்றும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 14 கடைகளுக்கு ரூ.11,700 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு தலா ரு.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 725 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.