அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
தந்தை மறைவு: தாயகம் திரும்பினார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்!
தந்தை மறைவால் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தாயகம் திரும்பினார்.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நாளை(பிப்.19) தொடங்குகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி வருகிற வியாழக்கிழமை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க..2024 - கௌதம் கம்பீர் வருகை! இந்திய அணிக்கு எழுச்சியா? வீழ்ச்சியா?
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கலின் தந்தை உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார். இதனால், மோர்னே மோர்க்கல் உடனடியாக தாயகம் திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் தொடர் முழுவதும் விலகியுள்ள நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க.. 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!