செய்திகள் :

தமிழக ஆளுநர் - விஜய் பரிமாறிக் கொண்ட புத்தகங்கள் என்ன?

post image

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்தபோது நினைவுப் பரிசாக புத்தகங்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை, ஃபெஞ்ஜல் புயல் நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுநரிடம் விஜய் மனு அளித்தார்.

இதையும் படிக்க : ஆளுநரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி மனு அளித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஆளுநருக்கு திருக்குறள் புத்தகத்தை நினைவுப் பரிசாக நடிகர் விஜய் வழங்கினார். பதிலுக்கு, பாரதியார் கவிதைகள் தொகுப்பை நினைவுப் பரிசாக ஆளுநர் வழங்கினார்.

Untitled Jan 02, 2025 02:29 pm

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண... மேலும் பார்க்க

நடிகர் எஸ்.வி. சேகரின் சிறை தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்

நடிகர் எஸ்.வி. சேகருக்கு அளிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளை; தாரைவார்க்க மாட்டோம்: அன்பில் மகேஸ்

தமிழக அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள், அவற்றை தாரைவார்க்க மாட்டோம் என அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள்!

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மூன்றாம் பருவ புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்திருந்தத... மேலும் பார்க்க

முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர்: ராமதாஸ் திட்டவட்டம்

சென்னை: பாமக இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் மாற்றமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரவித்துள்ளார்.முகுந்தன் நியமனத்தில், பாமக பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்துவ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? உயர்நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த வெளிநபர், மாணவியை பாலியல் வன்கொட... மேலும் பார்க்க