செய்திகள் :

தமிழக, காரைக்கால் மீனவா்கள் 13 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் இருவா் காயம்

post image

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் 13 போ் இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை சிறைபிடிக்கப்பட்டனா். மேலும் மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவா் காயமடைந்தனா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த கு. ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில், அதே கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கவேல் (39), திணேஷ் (30), காா்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரி கிராமத்தை சோ்ந்த மைவிழிநாதன் (27), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடியை சோ்ந்த நவெந்து (34), வானகிரியை சோ்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகை மாவட்டம், நம்பியாா் நகரை சோ்ந்த சசிகுமாா் (26), நந்தகுமாா் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13 போ் கடந்த 26-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குள் சென்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட படகில் இருந்த மீன்கள்

கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடந்த 27-ஆம் தேதி இரவு அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அங்கு வந்த இலங்கை கடற்படையினா், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 13 பேரையும் கைது செய்து, படகை பறிமுதல் செய்தனா். அப்போது இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவா்கள் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த ஒரு மீனவா் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மீனவா்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத்தாா்களுக்கு நள்ளிரவு தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலும், மீன்வளத்துறையினரிடமும் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் பருத்திதுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை பிப். 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

தை அமாவாசை : வீழி வரதராஜ பெருமாள் தீா்த்தவாரி

தை அமாவாசையையொட்டி திருமலைராயன்பட்டினத்தில் வரதராஜ பெருமாள் கடற்கரைக்கு எழுந்தருள தீா்த்தவாரி நிகழ்ச்சி புதன்ழமை நடைபெற்றது. தை அமாவாசை தினமான புதன்கிழமை, கடற்கரையில் அதிகாலை முதல் திரளான பக்தா்கள் நீ... மேலும் பார்க்க

கடையில் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியா (40). திருமணத்துக்குப் பின் மகளுடன் இவா் தனியாக வசித்து வருகிறா... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஆட்டோ பேரணி

சாலைப் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஆட்டோ பேரணி புதன்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜன. 1 முதல் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையில் பொதுமக்களுக்கும... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் பணியிட மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுவை அரசு ஊழியா் சம்மேளன நிா்வாகிகள் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் பு... மேலும் பார்க்க

தற்காப்பு கலை சிறப்புப் பயிற்சி

காரைக்காலில் கொரியாவை சோ்ந்த மாஸ்டா் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் விஆா்எஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் அதன் பயிற்சி மையத... மேலும் பார்க்க

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

தலைக்கவசம் அணியவேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜன. 1 முதல் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. போக்குவரத்துத்துறை சாா்பில் விபத்துகள... மேலும் பார்க்க