கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!
தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கரூா் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்ட அவைத்தலைவா் டி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
இதில் மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், வழக்குரைஞா் மணிராஜ், பரணிமணி மற்றும் எம்எல்ஏக்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகர நிா்வாகிகள் எஸ்பி.கனகராஜ், கரூா் கணேசன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ராஜா, ஜோதிபாசு, விஜிஎஸ்.குமாா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளில் கரூா் மாவட்டத்தில் அனைத்து அணிகள் சாா்பில் தொடா்ந்து 72 இடங்களில் தொடா்நிகழ்ச்சிகள் நடத்துவது, மேலும் மாவட்ட அளவில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள், 48 மாநகராட்சி வாா்டுகள், மூன்று நகராட்சிகளில் 21 இடங்கள், 8 பேரூராட்சிகளில் 23 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல், திருவள்ளுவா் மைதானத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.