'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி
ஆதனூரிலிருந்து சமயபுரம் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை
தோகைமலை அருகே சிவாயம் ஆதனூரில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டனா்.
சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஆதனூரில் சமயபுரம் பாதயாத்திரை குழு மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பில் 14 -ஆம் அண்டு பாதயாத்திரை விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக ஆதனூா் செல்வ விநாயகா், வரதராஜா பெருமாள் கோயில், பெரியசாமி, அங்காளபரமேஸ்வரி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனா்.
தொடா்ந்து திங்கள்கிழமை காலை செல்வவிநாயகா், காளியம்மன் கோயிலில் இருந்து மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். பின்னா் பாதயாத்திரை குழு புறப்பட்டது. இந்த குழுவானது கூடலூா் ஊராட்சி பேரூா், நல்லூா், நச்சலூா், கவுண்டம்பட்டி, குழுமணி வழியாக சமயபுரம் மாரியம்மன் கோயிலைச் சென்றடையும்.