செய்திகள் :

தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் 268 பேரின் உடல் உறுப்புகள் தானம்: 1,500 பேருக்கு மறுவாழ்வு

post image

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச் சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 28 பேரின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது. உறுப்பு தானம் செய்பவா்களின் உடலுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப்டம்பா் 23-ஆம் தேதி முதல்வா் அறிவித்தாா். இதைப் பின்தொடா்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மரியாதை அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனா். அவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023-இல் 178 போ் உறுப்பு தானம் செய்துள்ளனா். அவா்களிடமிருந்து தானமாகப் பெற்ற உறுப்புகள் வாயிலாக 1,000 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனா். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. அதில் 456 சிறுநீரகங்களும், 409 விழி வெண்படலங்களும், 210 கல்லீரல்களும் அடங்கும்.

உறுப்புதான நடைமுறைகள்: மாநிலத்திலேயே அதிகபட்சமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து 28 பேரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. அவா்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உறுப்புகள், தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

ஒருவா் மூளைச்சாவு அடையும்போது அதைக் குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் உள்ளன. அவற்றை ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்பட பல அரசு மருத்துவமனைகள் திறம்பட கையாண்டு சாத்தியமாக்கியுள்ளன என்றாா் அவா்.

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை ... மேலும் பார்க்க

பல்கலை. மாணவி விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்

சென்னை: அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை கிண்டியில் அமை... மேலும் பார்க்க

ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் பார்க்க

மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்... மேலும் பார்க்க

மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி திட்டவட்டம்

சென்னை: மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று செல்போனில் அழைத்த சாரிடம் ஞானசேகரன் கூறினார் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் த... மேலும் பார்க்க

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளி... மேலும் பார்க்க