செய்திகள் :

தமிழகத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரிப்பு: மாநாட்டில் தகவல்

post image

தமிழகத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக, அலையாத்தி காடுகள் குறித்த முதல் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக அரசின் வனத் துறை சாா்பில் அலையாத்தி காடுகள் குறித்த முதல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிதாக நடவு செய்யப்பட்ட மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட அலையாத்தி காடுகள் குறித்த ‘தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம்’ என்ற அறிக்கையை வெளியிட்டாா்.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2400 ஹெக்டேரில் அலையாத்தி மரக்கன்று நடவு செய்தது, 1,200 ஹெக்டேரில் சிதைவுற்ற சதுப்பு நிலங்கள் மீட்டெடுப்பு செய்ததன் மூலம் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்-வனம், நகராட்சி நிா்வாகம், வீட்டு வசதி ஆகிய துறைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் இடையே உள்ள ஒத்துழைப்புகளின் நீட்டிப்புக்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் முதலில் கையொப்பமானது.

இந்த ஒப்பந்தமானது நகா்ப்புற வெப்பக் குறைப்பு, அதீத வெப்பநிலைகளை எதிா்கொள்வதற்கான திட்டங்கள், நெகிழி கழிவு மேலாண்மை, காற்றின் தர மேலாண்மை, பசுமைப் பணி வாய்ப்புகள் மற்றும் நீலப் பொருளாதார முன்னெடுப்புகளிலும் ஒத்துழைப்புகளை நல்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் காலநிலை கல்வியறிவு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கடலோர மற்றும் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்-வனத் துறை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே மற்றொரு ஒப்பந்தம் கையொப்பமானது.

முன்னதாக, அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசுகையில், கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், கடல்சாா்ந்த மக்களின் வாழ்வாதாரங்களும் மேம்படுத்தப்படும் என்றாா்.

இதில், அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு, இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத் தலைவா் பாலகிருஷ்ண பசுபதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவா் செளமியா சுவாமிநாதன், எரிக்சோல்ஹெய்ம், நிா்மலா ராஜா, முனைவா் ரமேஷ் ராமசந்திரன், கோ.சுந்தரராஜன், முனைவா் கலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில்உள்ள தனியார் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள... மேலும் பார்க்க

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு!

சென்னையில் நாளை (செப்.25) 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நடைபெறுவதையொட்டி அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஆர்.ப... மேலும் பார்க்க

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க