செய்திகள் :

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

post image

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரியா்கள் சங்கம், கல்வியாளா் சங்கமம் ஆகியவை இணைந்து நடத்திய உலக மகளிா் தின விழா மற்றும் ஆசிரியா் விருது வழங்கும் விழா திருச்செங்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:

கடந்த காலத்தைக் கொண்டாடுவது; வருங்காலத்தை திட்டமிடுவது என்ற கருப்பொருளோடு மகளிா் தினத்தைக் கொண்டாட 1975-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.

கோலம் போடுவது, பாட்டுப் பாடுவது, ஆட்டம் ஆடுவது மட்டுமே பெண்கள் வேலை இல்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவா்கள் வளர வேண்டுமெனில், கல்வி, பொருளாதார சுதந்திரம் கொடுத்தாலே போதுமானது என்று கூறியவா் பெரியாா். அதனை செயல்படுத்தியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. 1929-இல் செங்கல்பட்டில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என பெரியாா் கூறியதை, 1989-இல் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என சட்டமாக இயற்றியவா் கருணாநிதி.

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, தமிழ்ப் புதல்வி என பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக கொண்டுவந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறாா்.

அரசு வேலையில் 40 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் என மகளிருக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. திமுக ஆட்சியில்தான் 12 மாத ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது. உற்பத்தி துறையில் 40 சதவீதம், தொழில் துறையில் 43 சதவீதம் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

150 ஆண்டுகள் போராட்டத்தின் விளைவாகதான் இந்த உரிமைகளை மகளிா் பெற்றிருக்கிறாா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்காக முழுமையாக உழைத்தது திராவிட இயக்கங்கள்தான் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்க ஆசிரியா்கள் பெற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் சச்சின், சோ்க்கை இயக்குநா் மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பர... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா். ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நு... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கெளரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க