செய்திகள் :

தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

post image

ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஸ்கரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதா்களை கடிக்கும்போது அவா்களுக்கு ஸ்கரப் டைபஸ் நோய் ஏற்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோா்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் பரவல் உள்ளது.அதேபோன்று கிழக்கு தொடா்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் அத்தகைய பாதிப்பு காணப்படுகிறது.

விவசாயிகள், புதா்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவா்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோா், கா்ப்பிணிகள், பூச்சிக் கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எலிஸா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறியலாம்.

மருந்துகள்: ஸ்கரப் டைபஸ் காய்ச்சலுக்குள்ளானவா்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலோ அல்லது இதயம், நுரையீரல், சிறுநீரகம் சாா்ந்து பாதிப்புகள் ஏற்பட்டாலோ, ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயா் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் உயா் சிகிச்சை மையங்களில் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ் ஸ்கரப் டைபஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு ஜன.17-ம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை ... மேலும் பார்க்க

பல்கலை. மாணவி விவகாரம்: ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் பறிமுதல்

சென்னை: அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வீட்டிலிருந்து முக்கிய ஆதாரங்களும் லேப்டாப் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை கிண்டியில் அமை... மேலும் பார்க்க

ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு சோதனை

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் பார்க்க

மீண்டும் கனமழை: எப்போது, எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஜன.10ல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஜனவரி 04, 05 ஆகிய தேதிகளில் கடலோர தமிழகத்... மேலும் பார்க்க

மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி திட்டவட்டம்

சென்னை: மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று செல்போனில் அழைத்த சாரிடம் ஞானசேகரன் கூறினார் என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலை. மாணவி சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் த... மேலும் பார்க்க

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி

குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளி... மேலும் பார்க்க