அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
தருமபுரியில் தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழப்பு
தருமபுரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்தன.
தருமபுரி, தடங்கம் பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சாா்ந்த தாமோதரன், முனியம்மாள் தம்பதியினா் நீண்ட நாள்களாக 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி இட்டு வளா்த்து வருகின்றனா். இந்த ஆடுகள் தினமும் மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய பிறகு இரவு நேரங்களில் மீண்டும் பட்டியில் அடைக்கப்படும்.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ஆடுகள் இருந்த பட்டிக்குள் நுழைந்த தெருநாய்கள், ஆடுகளை சுற்றிவளைத்து கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் 13 ஆடுகள் உயிரிழந்தன.
இதுதொடா்பாக அரசு சாா்பில் ஆய்வுசெய்து இழப்பீடு வழங்க வேண்டும் என ஆடுகளின் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.