செய்திகள் :

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறைக்கு இன்று வந்த மின்னஞ்சலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர், மோப்ப நாய்கள் மூலம் தாஜ்மஹால் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய உதவி காவல் ஆணையர் சையது அரீப் அகமது கூறியதாவது, “சுற்றுலாத் துறைக்கு வந்த மின்னஞ்சலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாங்கள் இந்தப் பகுதி முழுக்க சோதனை செய்தோம். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் போலியாக மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று கூறினார்.

இதையும் படிக்க | கடந்த 10 ஆண்டுகளில் 400 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!

இந்த விவகாரம் தொடர்பாக தாஜ்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க

ராகுலுக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்திற்குள் நுழைய மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுக்கு உரிமை உள்ளது: பிரியங்கா காந்தி

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திக்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க அரசியல் சாசன உரிமை உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள மசூத... மேலும் பார்க்க

மக்களே எச்சரிக்கை! அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்படும் பாட்டில் குடிநீர்!

இந்தியாவில் பாட்டில் குடிநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் அதிக ஆபத்து நிறைந்த உணவாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.ஒரு காலத்தில், பரவலாகப் பயன்படுத்தப்ப... மேலும் பார்க்க

ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக சுமார் 1 கி.மீ நடந்துவந்து சுவாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் சாதாரண பக்தரைப்போன்று கிரண்ட... மேலும் பார்க்க