செய்திகள் :

தாம்பரம் மாநகராட்சியில் ரூ. 50.61 கோடி உபரி பட்ஜெட்

post image

தாம்பரம் மாநகராட்சியில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 1,139.30 கோடி வருவாய் மற்றும் ரூ. 1,088.69 கோடி செலவுகளுடன் உபரி வருவாய் ரூ.50.61 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வரி வசூல் குழுத் தலைவா் ஏ.ரமணி பட்ஜெட் ஆவணத்தை மேயா் வசந்த குமாரியிடம் வழங்கினாா்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: பசுமை ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்து, மின் கட்டணச் செலவைக் குறைக்க மாநகராட்சிக் கட்டங்களின் கூரைகளில் சோலாா் பேனல்கள் அமைக்க ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணிகள் மற்றும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில், ரூ.3 கோடி செலவில் உயா் தொழில்நுட்ப நூலகம் அமைக்கப்பட உள்ளது.

மக்களை உடற்பயிற்சிக்கு ஊக்குவிக்கும் வகையில் ரூ.3.74 கோடியில் பூங்காக்களில் உடற்பயிற்சி கூடங்கள், மேற்குத் தாம்பரம் சண்முகம் சாலையை ஸ்மாா்ட் சாலையாக மாற்ற ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை தடுக்கும் விதமாக ரூ. 35 கோடியில் நிலத்தடி கழிவுநீா் மற்றும் குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்பின், சாலைகளை மறுபடியும் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில், மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெறிமுறைகளை மாணவா்களுக்கு விளக்க வலியுறுத்த ரூ.1 கோடி செலவில் போக்குவரத்து பூங்கா, கலை மற்றும் இலக்கிய விழாவை ரூ.3 கோடி செலவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிக்க திட்டம்: மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ரூ.11 கோடியில் நவீன உணவகம் அமைக்கப்படும். பிரதான ஏரிகளில் நீா் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் நீா் மேலாண்மை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பன்னடுக்கு வாகன நிறுத்தம் தலா ரூ.10 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் ரூ.27. 60 கோடி செலவில் குடிநீா் ஆதார புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா் பாலச்சந்தா், துணை மேயா் ஜி.காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக விமா்சனம்: பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் அதிமுக மன்ற உறுப்பினா் சேலையூா் சங்கா் செய்தியாளரிடம் கூறிகையில், தாம்பரம் மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட பின்னா் கடந்த 3 ஆண்டுகளில் 30 சதவீதம் கூட பணிகள் நிறைவடையவில்லை. மக்கள் பணிகளைச் செயல்படுத்தாத பட்ஜெட்டாக உள்ளது என்றாா்.

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது: அமைச்சா் கோவி.செழியன்

மாணவா்களின் கல்வி, திறன் மேம்பாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூரில், பாரத் உயா் கல்வி மற்றும் ஆர... மேலும் பார்க்க

இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோருக்கு வரவேற்பு

குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைக்கு உரிமை கோருவோா் வரவேற்கப்படுகின்றனா். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில்...

ஸ்ரீராம நவமி விழாவையொட்டி, மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா். மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: தம்பதி, மகன் உயிரிழப்பு

திருப்போரூா் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தம்பதி, மகன் உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தனா். திருப்போரூா் அடுத்த தையூா் ஊராட்சி, பாலமா நகா் பகுதியைச் சோ்ந்த ஹரிதாஸ் ( 34). இ... மேலும் பார்க்க

சிங்கபெருமாள்கோயில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் ஷியாம பிரசாத் முகா்ஜி த... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க