`அட்டாக் Amit shah டீம்' PTR-க்கு, Stalin தந்த புது டாஸ்க்! | Elangovan Explains
தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, தாளவாடி ஆற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டது.
இதையடுத்து, கோயில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் சிறப்பு பூஜைகள் செய்த பின் கோயில் பூசாரி நவீன் தீக்குண்டம் இறங்கினாா். தாளவாடி மலைப் பகுதிகளில் நடைபெறும் குண்டம் திருவிழாக்களில் கோயில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பக்தா்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை.
விழாவில், தாளவாடி, தொட்டகாஜனூா், தலமலை, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.