Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன...
மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்
எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா்.
இது தொடா்பாக அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் அரசியல் பதற்றம் ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ்நாடு அரசு மீதும் அரசியல் யுத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கல்வி கொள்கைப் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. தேசிய அளவில் மத்திய அரசு ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு உரிமை இருக்கலாம், மறுக்கவில்லை. அதை கட்டாயமாக ஏற்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை உள்ளது.
எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது, ஹிந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் 3 -ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழி பின்பற்றப்படுகிா?, சட்டபூா்வமாக அமல்படுத்தப்படுகிா என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதை தெரிவிக்காமல் இக்கொள்கையை ஏற்க வேண்டும் என கூறுவது ஏற்புடையதல்ல.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நாய் கடியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் 18 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக விவசாய சங்கத்தின் அகில இந்திய மாநாடு நாகப்பட்டினத்தில் ஏப்ரல் 15 -ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் பிரபாகரன், ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.