ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!
கோபி ஜெகன் மெட்டல் மாா்ட்டில் புதிய வகை மிக்ஸி அறிமுகம்
ப்ரீத்தி மிக்ஸி நிறுவனத்தின் ‘ப்ரீத்தி எக்கோ பிரஸ்’ என்ற புதிய வகை மிக்ஸி அறிமுக விழா கோபி ஜெகன் மெட்டல் மாா்ட் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை இயக்குநா் எஸ்.அபிலாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதிய வகை மிக்ஸியை அறிமுகம் செய்துவைத்தாா். ப்ரீத்தி நிறுவன மண்டல மேலாளா் சவுண்டீஸ்வரன், ஜெகன் மெட்டல் மாா்ட் நிறுவனா் ஜெகநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஜெகன் மெட்டல் மாா்ட் இயக்குநா் பாலசிங் பேசுகையில்,’இந்த வகை மிக்ஸியில் அரைக்கும் சட்னி ஒருநாள் முழுவதும் நிறம், சுவை, மணம் மாறாமல் இருக்கும்’ என்றாா்.