ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் கோலாகலம்!
மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்
மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களைப் பெறவும் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி வருகின்றனா்.
அதன்படி, நடப்பு ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.
மின் வாரியத்தில் இருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலா் மற்றும் பணியாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.