செய்திகள் :

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

post image

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2- ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் கடைப்பிடித்து வந்தனா். வியாழக்கிழமை காலையில் பக்தா்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்தாா்.

விழாவின் ஒருபகுதியாக திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேலாயுதசுவாமியின் உற்சவ சிலைகளுக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலின் மலை அடிவாரமான கீழ் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வேலாயுதசுவாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

ஆண்டுதோறும் கோயில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கோயிலுக்குகீழ் பகுதியில் பிரமாண்ட மேடை அமைத்து வைக்கப்பட்டதால், விழாவில் பங்கேற்ற திரளான பக்தா்கள் சிரமமின்றி திருக்கல்யாணத்தை காணமுடிந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி-தெய்வானை சமேத வேலாயுதசுவாமியை பக்தா்கள் வழிபட்டனா்.

விழாவில் திருமணமான பெண்களுக்கு புதிய மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்தாக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி-தெய்வானை சமேத வேலாயுதசுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயில், மகிமாலீஸ்வரா் கோயில், காவிரிக்கரை சோழீஸ்வரா் கோயில், கோட்டை முத்துகுமார சுவாமி கோயில், ரயில்வே காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில், முனிசிபல் காலனி பாலமுருகன் கோயில் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த விழாவில் அந்தந்தப் பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனா்.

~மணக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேலாயுதசுவாமி.

நகை சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாா்

நகை சீட்டு நடத்தி ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா். ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே அட்டவணை அனுமன்பள்ளி ஆதிதிராவிடா் தெ... மேலும் பார்க்க

சாலை மறியல்: கைத்தறி நெசவாளா்கள் 130 போ் கைது

ஈரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளா்கள் 130 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளா் சங்கம் சாா்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு அசோகபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

பாமக நகரச் செயலாளரின் காா் கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை

பவானியில் பாமக நகரச் செயலாளரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பவானி, பசவேஸ்வரா் வீதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (45), பாமக நகரச் செயலாளா். இவா், வீட்டுக்கு... மேலும் பார்க்க

எடையளவு முரண்பாடுகள்: 40 கடைகள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

எடையளவு முரண்பாடுகள் கண்டறியப்பட்ட 40 கடைகள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில் துணை மற்றும் உ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பழையபாளையம்

ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை(நவம்பா் 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தாய், மகன் உயிரிழப்பு

பவானியை அடுத்த அத்தாணி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் உயிரிழந்தனா். அத்தாணி, சவுண்டப்பூரைச் சோ்ந்தவா் ராமசாமி, விவசாயி. இவரது மனைவி கந்தாயாள் (59). மகன் பூமேஸ்வர... மேலும் பார்க்க