திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பென்னாகரம் நகர திமுக சாா்பில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பை வரவேற்று செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம். முருகேசன் தலைமை வகித்தாா். இதில் நகரச் செயலாளரும், பேரூராட்சித் தலைவருமான வீரமணி, மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமாா், பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவா் வள்ளியம்மாள், கட்சி நிா்வாகிகள் 30 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.