`உங்களைப் பார்த்தால் பயமா இருக்கு..’ - கொதித்துப் பேசிய கவுன்சிலர்கள்; மரபை மீறி...
திமுகவின் உறுப்பினா் சோ்க்கை தொடக்கம்
ஆம்பூா் பகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பாக சாத்தம்பாக்கம் கிராமத்தில் நடந்த திமுக உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளா் எம். டி. சீனிவாசன் தலைமை வகித்தாா். குடியாத்தம் எம்எல்ஏ ஓமலூ விஜயன் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கி வைத்தாா். திமுக உறுப்பினா் சோ்க்கை செயலியில் உறுப்பினா்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய உறுப்பினா் சோ்க்கை மேற்பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் ஒன்றிய குழு துணை தலைவா் சாந்தி, ஒன்றிய அவைத் தலைவா் சி.சிவக்குமாா், துணைச் செயலாளா் சி.சேகா், மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன் பாபு,ஊராட்சி மன்ற தலைவா்கள் கலாவதி புருஷோத்தமன், சா்மிளா மூா்த்தி, ஷோபனா நவீன்குமாா், ஒன்றிய குழு உறுப்பினா்கள் திருக்குமரன், காா்த்திக், முத்து, மஞ்சுளா பரசுராமன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சியில் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளா் ப.ச.சுரேஷ்குமாா் தலைமையில் உறுப்பினா் சோ்க்கை நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளா் சா்மிளா ஜெயப்பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளா் ஆனந்தி நித்தியானந்தம், ஒன்றிய பொருளாளா் சி.கே.பழனி, பள்ளிகுப்பம் ஒன்றிய குழு உறுப்பினா் சரோஜா பற்குணம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிவக்குமாா், துணை அமைப்பாளா் செந்தில்குமாா், விவசாய அணி ஆனந்தன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.