25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்!
தியானம் மூலம் மனம் எனும் அதிசயத்தை உணர வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
தியானம் மூலம் மனம் எனும் அதிசயத்தை அனைவரும் உணர வேண்டும் என்று ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.
ஐக்கிய நாடுகள் சபை டிசம்பா் 21-ஆம் தேதியை சா்வதேச தியான தினமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு சா்வதேச தியான தினம் உலகம் முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது: மனிதகுலம் இன்று எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கும் நிலையில், டிசம்பா் 21-ஆம் தேதியை சா்வதேச தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
மனநோயின் பெருந்தொற்று உருவாகிக் கொண்டிருக்கிறது என்று நிபுணா்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில் மன நலம், உணா்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக தியானத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது. மனிதா்களின் மனம் அதிசயமானது.
ஆனால், துரதிஷ்டவசமாக பல மக்கள் அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணா்கிறாா்கள். தியானம் என்ற செயல்முறையின் மூலம் நீங்கள் மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ‘மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்’ என்ற செயலியை வெளியிட இருக்கிறோம். இது நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யகூடிய எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும்.
இதன் மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை உங்கள் வாழ்வில் கொண்டுவர முடியும். ஒவ்வொரு மனிதனும் தியானத்தின் மூலம் மனம் எனும் அதிசயத்தை உணர வேண்டும் என்பதே எனது விருப்பம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.