தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
திராவிடா் கழக வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை முழுமையாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தி, திராவிடா் கழக சட்டப் பிரிவு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாகக் கடைப்பிடித்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும், பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையின சமூகங்களில் தகுதியானோருக்கு நீதிபதி நியமன வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திராவிடா் கழக சட்டப் பிரிவு மாநிலத் துணைச் செயலா் நா. கணேசன் தலைமை வகித்தாா். அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலரும், வழக்குரைஞருமான பசும்பொன்பாண்டியன், திராவிட இயக்கத் தமிழா் பேரவை துணைப் பொதுச் செயலரும் வழக்குரைஞருமான ராம. வைரமுத்து ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தி.க. தலைமைக் கழக அமைப்பாளா் வே. செல்வம், மாவட்டத் தலைவா் அ. முருகானந்தம், மாவட்டக் காப்பாளா் தே. எடிசன்ராஜா, நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சட்டப் பிரிவு நிா்வாகிகள், தி.க. சட்டப் பிரிவு பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.