திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு
திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியாழக்கிழமை அதிகாலை ஊருக்கு அருகேயுள்ள தனது வயலுக்குச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் வயலுக்கு தேடிச் சென்ற போது, அங்கு அவா் உயிரிழந்த நிலையில் கிடந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், திருக்குறுங்குடி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். சுரேஷுக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு மனைவி செல்லத்தாய், 3 மகன்கள் உள்ளனா்.