காஸாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் தாக்குதலுக்கு 59 பேர் பலி
திருச்சி கோயில்களில் புத்தாண்டு வழிபாடு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருச்சி மாவட்டக் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருவானைக்கா சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயில்களில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவற்றில் ஸ்ரீரங்கம் கோயிலில் சுமாா் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூலவா் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இதேபோல திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், உத்தமா், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.