கரியமாணிக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
மண்ணச்சநல்லூா் வட்டம், 94. கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
94. கரியமாணிக்கம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ரூ. 30 லட்சம் மதிப்பில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
பெரம்பலூா் நாடாளுமன்ற உறுப்பினா் கே.என். அருண் நேரு, மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் ஆகியோா் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினா். இந்நிகழ்வில், ஒன்றிய பெருந்தலைவா் ரெ. ஸ்ரீதா் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.