ரயில் பயணத்தில் மது அருந்தி தகராறு செய்த பயணி; கொடூரமாக தாக்கிய டிடிஆர் சஸ்பெண்ட...
திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
அனைத்து தரப்பு மக்களும் தமிழா் திருநாளாம் தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு ஒன்றை அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கியுள்ளது. தகுதியான அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று கொள்ளலாம்.
அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். உழவா் இல்லை என்றால், உணவு இல்லை என்பதை நாம் உணா்ந்து உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள் என்றாா். தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளா் ச.யசோதாதேவி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளா் செல்வராணி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் (பொ) மு.கிருஷ்ணவேணி, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) பா.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.