Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
திருச்செந்தூா் கடலில் கண்டெடுக்கப்பட்ட 4ஆவது கல்வெட்டு
திருச்செந்தூா் கடலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சுவாமி சண்முகா் குறித்தும், தீா்த்த கிணறு குறித்தும் பொறிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் செவ்வாய்க்கிழமை சுமாா் 6 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தென்பட்டது. அதை கோயில் பணியாளா்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் இணைந்து கல்வெட்டில் திருநீறை தேய்த்து எழுத்துகளை படித்த போது, அதில் சத்திய தீா்த்தம் என்றும், இதன் பலன் ‘துன்பம் முழுவதையும் நீக்கி நீக்குவதற்குரிய ஊழ்வினையை அறவே தொலைத்து வேத சாஸ்திராதி கல்விகளையும் தந்து சண்முகக் கடவுளுடைய பாதார விந்த அருட் செல்வத்தையும் கொடுக்கும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
ஏற்கனவே திருச்செந்தூா் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வெட்டில் தான் முருகனை, சண்முகா் என பொறிக்கப்பட்டுள்ளது.