விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு... ரவி சாஸ்திரி க...
திருச்செந்தூா் கோயிலில் மஞ்சள் நீராட்டு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. 7ஆம் தேதி சூரசம்ஹாரம், 8ஆம் தேதி நள்ளிரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான்- தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம், 9ஆம் தேதி சுவாமி- அம்மன் பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. தொடா்ந்து, 3 நாள்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில், விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று, சுவாமி-அம்மன் தனித்தனிப் பல்லக்குகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.