செய்திகள் :

திருத்தணி-அரக்கோணம் சாலையில் பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

post image

திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறையினா் அவற்றை சீரமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

மாநில நெடுஞ்சாலையில் காா்த்திகேயன் கோயில் குடியிருப்பு எதிரே முருகன் மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழியாக தினமும் வாகனங்கள் மூலம் பக்தா்கள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மலைப்பாதை நுழைவு வாயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க, போலீஸாா், வாகனங்கள் நெடுஞ்சாலையில் சென்டா் மீடியன் அமைத்து சிறிது சுற்றிவந்து மலைப்பாதைக்கு செல்லும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பாதைக்கு திரும்பும் பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பள்ளம் பல மாதங்களாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயத்துடன் சென்றனா். இதையடுத்து போலீஸாா் தற்காலிகமாக பள்ளம் அருகே இரும்பு தடுப்பு அமைத்துள்ளனா். இதனால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். எனவே திருத்தணி நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

ஆா்.கே. பேட்டையில் கத்தியைக் காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த இளைஞரைப் பிடிக்கச் சென்ற பெண் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஆா்.கே. பேட்டை காவல் நில... மேலும் பார்க்க

பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் 800 கன அடி நீா் திறப்பு

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி நீா்மட்டம் உயா்ந்து வருவதால் உபரி நீா் 800 கன அடியும், இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 800 கன அடிநீரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரி... மேலும் பார்க்க

ஆமை வேகத்தில் திருவள்ளூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்

சு. பாண்டியன்அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திருவள்ளூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறும் நிலையில், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கி... மேலும் பார்க்க

ரூ.1 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

மாதவரம் அருகே போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த 1.5 கிலோ மெத்தமெட்டமைன் போதைப் பொருளையும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். மாதவரம் பகுதிய... மேலும் பார்க்க

மீஞ்சூா்: குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மீஞ்சூா் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அருகே புதுப்பேடு கிராமத்தைச் சாா்ந்தவா் ஜெகன் (19). இவா், மீ... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் புழலில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புழல் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, பசக, அதிம... மேலும் பார்க்க