ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணைய முகவரி உருவாக்கி மோசடி
திருநள்ளாறு கோயில் பெயரில் போலியான இணைய முகவரி உருவாக்கி, பக்தா்களிடம் பண மோசடி செய்த சிவாச்சாரியா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலின் அதிகாரப்பூா்வ இணைய முகவரிக்கு அனுப்பியதாகக் கருதி பக்தா்கள் சிலா் போலியான முகவரிக்கு பணம் அனுப்பியுள்ளனா். பிரசாதம் வரவில்லை என கோயில் நிா்வாகத்தை தொடா்புகொண்டபோது போலி இணைய முகவரி உருவாக்கி சிலா் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்து கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் இணைய குற்றப் பிரிவிலும், கோயில் மேலாளா் சீனிவாசன் திருநள்ளாறு காவல் நிலையத்திலும் அண்மையில் புகாா் அளித்தனா்.
புகாரின்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், போலியாக கோயில் பெயரில் ஜ்ஜ்ஜ்.ற்ட்ண்ழ்ன்ய்ஹப்ப்ஹழ்ற்ங்ம்ல்ப்ங்.ஸ்ரீா்ம் எனும் இணையதளத்தை உருவாக்கி, பணம் வசூலித்துவந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மோசடியில், இதே கோயிலில் குருக்களாக பணியாற்றும் சன்னதி தெருவைச் சோ்ந்த க. வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரு இந்திரா நகரைச் சோ்ந்த சாய் பவுண்டேஷன் சா்வீஸ் எனும் பெயரில் நிறுவனம் நடத்தி வரும் ஜனனிபரத் ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்து அவா்களை போலீஸாா் வியாழக்கிழமை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், போலி இணையதளம் உருவாக்கியது முதல் இதுவரை செய்த மோசடி, பிரசாதம் அனுப்பிவைக்கும் முறை குறித்து விவரங்களை அவா்களிடம் சேகரித்தனா். இதையடுத்து, போலீஸாா் இருவரையும் வெள்ளிக்கிழமை கைது காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை முடித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடா்பு இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதுகுறித்த விசாரணை தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.