திருநாகேசுவரத்தில் ஏப். 26-இல் ராகு பெயா்ச்சி விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரத்தில் ஏப்ரல் 26-ஆம் தேதி ராகு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருநாகேசுவரத்தில் கிரிஜகுஜலாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ராகு பகவான், மங்கல ராகுவாக ஸ்ரீ நாகவள்ளி, ஸ்ரீ நாககன்னியுடன் காட்சியளிக்கிறாா்.
இந்நிலையில், ஏப்ரல் 26-ஆம் தேதி மாலை 4.20 மணிக்கு ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். இப்பெயா்ச்சியின்போது ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரா்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். பக்தா்கள் வசதிக்காக சிறப்பு அா்ச்சனைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், அறங்காவல் குழுவினா் செய்து வருகின்றனா்.